ARTICLE AD BOX

லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களைச் சாய்த்தனர்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101, கேப்டன் ஷுப்மன் கில் 147, ரிஷப் பந்த் 134 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டங், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், பிரைடன் கார்ஸ், ஷோயிப் பஷீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

6 months ago
7







English (US) ·