ARTICLE AD BOX

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷி நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி மிரளச் செய்தார். அவரது புயல் வேக ஆட்டத்தால் 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
14 வயதான வைபவ் சூர்யவன்ஷி பிஹார் மாநில தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமஸ்திபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரியில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் வலுவான மும்பை அணிக்கு எதிராக களமிறங்கினார்.

7 months ago
8







English (US) ·