ARTICLE AD BOX

அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று( ஜூன் 13) சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் , சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை `லப்பர் பந்து', `இங்கு நான்தான் கிங்கு' படங்களில் நடித்ததற்காக, நடிகர் பால சரவணன் பெற்றுக்கொண்டார். அவருக்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் விருதை வழங்கினார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பால சரவணன், ``ஆர்சிபி அணிக்கு 18 வருடங்கள் என்றால், எனக்கு விருது கிடைப்பதற்கு 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த விருதுக்கு முதற் காரணமான இயக்குநர் தமிழரசு பச்சமுத்துவுக்கு நன்றி. 10 படங்களுக்கு சமமாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். மிக முக்கியமான அரசியல் வசனத்தை எனக்குக் கொடுத்தார். முதல் படமான `குட்டிப்புலி'யில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் முத்தையாவுக்கு நன்றி.
பால சரவணன்`கனா காணும் காலங்கள்' தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. புரோட்டா கடை வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் ஆடிஷனுக்காக ரவி சார் கூப்பிட்டதால் இங்கு வந்தேன். அதிலிருந்துதான் என் திரைப்பயணம் தொடங்கியது. எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. ஆனந்த விகடன் விருது வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·