ARTICLE AD BOX

பூந்தமல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, ஐயப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை குருபூஜை மற்றும் ஷாகா பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர்.
உரிய அனுமதியின்றி இந்நிகழ்ச்சிகள் நடப்பதாக எஸ்.ஆர்.எம்.சி. (போரூர்) போலீஸாருக்கு, பொதுமக்கள் மூலம் புகார் சென்றது. இதையடுத்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் உரிய அனுமதியின்றி அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது தெரியவந்தது.

2 months ago
4







English (US) ·