பெங்களூர் சிறையில் இருந்த மாவோயிஸ்ட் சுந்தரி ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்

6 months ago 8
ARTICLE AD BOX

ஊட்டி: பழங்குடியின மக்களை மூளைச் சலவை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறையிலிருந்த மாவோயிஸ்ட் சுந்தரி ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கொலகொம்பை அருகே நெடுகல்கொம்பை பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு சில மாவோஸ்டுகள் வந்தனர். அங்கு வாழும் பழங்குடியின மக்களிடையே அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும், அரசுக்கு எதிராக பழங்குடியினரை மூளைச் சலவை செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக சுந்தரி, டேனிஷ், ஸ்டாலின், ஷோபா மற்றும் சாவித்திரி ஆகிய ஐந்து பேர் மீது அப்போது கொலக்கம்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Read Entire Article