பெண் ஊழியர்கள், வழக்கறிஞர்களை செல்போனில் படம் பிடித்ததாக கைதான முதியவருக்கு ஜாமீன்

3 months ago 5
ARTICLE AD BOX

நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, செல்போனில் பெண் ஊழியர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களை படம் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 70 வயது முதியவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சுதிர் ராம்சந்த புல்சந்தானி என்ற 70 வயது முதியவர் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக கடந்த செப்.3 அன்று சென்னை பெருநகர 10-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது தனக்கு எதிராகப் புகார் அளித்தவரையும், பெண் ஊழியர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களையும் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறி, அவரை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Read Entire Article