பெற்றோர்களாக பெருமைப்படும் தனுஷ், ஐஸ்வர்யா.. வைரலாகும் புகைப்படம்

6 months ago 8
ARTICLE AD BOX

Dhanush : தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதுவும் கடந்த மூன்று வருடங்களாக்கு முன்பே இவர்கள் விவாகரத்தை அறிவித்து விட்டனர். ஆனாலும் தங்களது குழந்தைகளுக்கு நடக்கும் விழாவில் இருவரும் ஒன்றாக பங்கு பெற்று வருவார்கள்.

மேலும் தன்னுடைய பட விழாக்களில் தனுஷ் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரை அழைத்து வருவார். ஐஸ்வர்யாவும் தனது வீட்டு விழாவில் நடக்கும் நிகழ்வுகளில் மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.

இந்த சூழலில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். சென்னையில் உள்ள அமெரிக்கா இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்த இவர் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். இதற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்று இருக்கிறது.

மகனின் பட்டமளிப்பு விழாவில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ்

dhanush-aishwaryadhanush-aishwarya

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இணைந்து யாத்ராவை கட்டி அணைப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதை தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பெற்றோர்களாக பெருமைப்படுகிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் தனுஷ் நடித்துள்ள குபேரா படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

அதோடு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றிலும் நடித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமாவில் பிஸியாக உள்ள நிலையில் கடந்த வருடம் அவரது இயக்கத்தில் வெளியான லால் சலாம் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Read Entire Article