போன் போட்டு கேப்டன் பதவி வேண்டாம் என்றேன்: மனம் திறக்கும் ஜஸ்பிரீத் பும்ரா

6 months ago 7
ARTICLE AD BOX

லீட்ஸ்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானலுக்​காக முன்​னாள் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான தினேஷ் கார்த்​திக்​குடன் கலந்​துரை​யாடி​னார்.

அப்​போது ஜஸ்​பிரீத் பும்ரா கூறிய​தாவது: டெஸ்ட் கேப்​ட​னாக நான் தேர்வு செய்​யப்​ப​டாத​தில் எந்த ஆடம்​பர​மான கதைகளும் இல்​லை. நான் நீக்​கப்​பட்​ட​தாக எந்த சர்ச்​சையோ அல்​லது தலைப்​புச் செய்​தியோ இல்​லை. ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறு​வதற்கு முன்​னர் ஐபிஎல் தொடரின் போது, இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எனது பணிச்​சுமை குறித்து பிசிசிஐ​யிடம் பேசினேன்.

Read Entire Article