``போரை தேர்வு செய்தது பாகிஸ்தான்; ஆனால்..'' முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

7 months ago 8
ARTICLE AD BOX

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.

இந்தப் பதில் தாக்குதலால், நேற்றிரவு இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் வந்ததாகவும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்திய இராணுவம்இந்திய இராணுவம்

இத்தகைய பதட்டமான சூழலில், வியாழன் இரவு 9 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலை இந்தியா முறியடித்திருக்கிறது.

பாதுகாப்பு கருதி இன்று பஞ்சாப் vs டெல்லி இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டி கைவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

War has been chosen by Pakistan when they had an opportunity to keep quiet.
They have escalated to save it’s terrorist assets, speaks so much about them.
Our forces will reply in the most appropriate manner, a manner Pakistan will never forget.

— Virrender Sehwag (@virendersehwag) May 8, 2025

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "அமைதியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தபோது போரை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான்; தீவிரவாதிகளை காப்பாற்ற பாகிஸ்தான் அடுத்தக்கட்ட நகர்வை மேற்கொள்கிறது. ஆனால் நமது இந்திய இராணுவம் பாகிஸ்தானிற்கு மறக்க முடியாத வகையில் பதிலடி கொடுக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

``தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!
Read Entire Article