போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: பஞ்சாப் வழக்கறிஞர் சென்னையில் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற பஞ்சாப் மாநில வழக்கறிஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளில் ஒருவரான ஸ்காட் கே.ஷோனௌர் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 27-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘பஞ்சாப் மாநிலம் நங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் குமார் (32) என்பவர் போலியான ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல வேண்டி பி1/பி2 விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். மேலும், அவர் நேர்காணலின்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தது போல போலி ஆவணம் வைத்திருந்தார். அதோடு, அவர் வழங்கிய ஊதிய ரசீதும் போலியானது என தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.

Read Entire Article