ARTICLE AD BOX

துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39.95 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது ஐசிசி. கடந்த முறை ரூ.11.65 கோடி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது பரிசுத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. நவம்பர் 2 வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இந்தத்தொடரின் மொத்த பரிசுத் தொகைரூ.122.50 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2022-ம் ஆண்டுநியூஸிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட 297 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் கடந்த முறை ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.31 கோடியாக மட்டுமே இருந்தது.

3 months ago
5







English (US) ·