ARTICLE AD BOX

நவிமும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 21-வது ஓவரில் பீல்டிங்கின் போது இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவலுக்கு முழங்கால் மற்றும் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து களத்தில் இருந்து வெளியேறிய அவர், அதன் பின்னர் திரும்பிவரவில்லை. ஸ்கேன் பரிசோதனையில் பிரதிகா ராவலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

2 months ago
4







English (US) ·