ARTICLE AD BOX

மகளிர் சுகாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பாடல் பல்வேறு மொழிகளில் உருவாக இருக்கிறது. மாதவிடாய் காலங்களில் சுகாதாரமற்றமுறையை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்த அருணாச்சலம் முருகானந்தம் இந்தப் பாடலை உருவாக்குவதற்காகக் கவிஞர் பா.விஜய்யுடன் இணைந்துள்ளார்.
இதற்கான அறிவிப்பை அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். “இந்த பாடலின் தமிழ் வரிகளை பா.விஜய் எழுதுகிறார். இப் பாடல், உலகம் முழுவதும் உள்ளபல்வேறு மொழிகளில் வெளியிடப்படும்" என்றார் அவர். துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய தொழிலதிபர் தாரா கிரியேஷன்ஸ் சுதிர் இதை தயாரிக்கிறார். “உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்தப் படைப்பை அர்ப்பணிக்கிறோம்” என்றார் அவர்.

3 months ago
5





English (US) ·