ARTICLE AD BOX

மதுரை: மதுரையில் ‘சிட் பண்ட்’ நடத்துவதாக கூறி ரூ.15.50 லட்சம் மோசடி செய்ததாக அரசு பள்ளி ஆசிரியை மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றொரு அரசு பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியையான கவிதா. இவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார் ஒன்றின் விவரம்: மதுரை அலங்காநல்லூர் அருகிலுள்ள தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணிபுகிறேன். அலங்காநல்லூர் சரந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணிபுரியும் ரேவதியை 2009 முதல் தெரியும். இவர் என்னிடம் பேசினார். அப்போது நானும், எனது கணவரும் ‘சிட் பண்ட்’ நடத்துகிறோம். இதில் சேமிப்பு சீட்டு திட்டத்தில் தவணை முறையில் பணம் செலுத்தினால் மொத்தமாக தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

8 months ago
8







English (US) ·