ARTICLE AD BOX

சென்னை: மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பிளம்பரை, கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு கணபதி (28). பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் ராஜதுரை (30). அன்பு கணபதிக்கும், ராஜதுரை மனைவிக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது ராஜதுரைக்கு தெரியவந்ததையடுத்து, இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக ராஜதுரைக்கும், அவரது மனைவிக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜதுரை மற்றும் அன்பு கணபதியின் குடும்பத்தினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

3 months ago
5







English (US) ·