ARTICLE AD BOX
மலையாளம் தவிர்த்து மாற்று மொழிகளில் துல்கர் நடித்த முதல் திரைப்படம் வாயை மூடி பேசவும். இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மலையாளம் மொழியில் ஒரேநேரத்தில் உருவானது!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் துல்கர் நேரடியாக தமிழ் மொழியில் நடித்த திரைப்படம் ஓ காதல் கண்மணி. 2015-ல் வெளியான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
தென்னிந்திய நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான தெலுங்கு - தமிழ் திரைப்படம் மகாநடி (நடிகையர் திலகம்). நடிகர் துல்கர், இத்திரைப்படத்தில் நடிகர் ஜெமினி கணேசனாக நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
வளர்ந்து வரும் இணைய வழி மோசடிகளை மையப்படுத்தி இயக்குனர் தேசிங்கு இயக்கிய தமிழ் மொழி திரைப்படம். தமிழ் திரையுலகில் நடிகர் துல்கரின் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்த படங்களில் இதுவும் ஒன்று.
தெலுங்கு, தமிழ் மொழி இரண்டிலும் ஒரே நேரத்தில் உருவாகி, இந்திய திரை ரசிகர்களை ஈர்த்த ஒரு காதல் திரைப்படம் சீதா ராமம். நாயகன் துல்கர் மட்டும் அல்லாது, நாயகி மிருணால் தாகூர் நடிப்பும் பாராட்டுதல்களை குவித்தது!
பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி த்ரில்லர் திரைப்படம் Chup: Revenge of the Artist. நடிகர் துல்கரின் பாலிவுட் பயணத்திற்கு உதவியாக இருந்து ஒரு திரைப்படம் இதுவாகும்.
பங்கு சந்தை மோசடிகளை அடிப்படையாக கொண்டு தெலுங்கு மொழியில் உருவான மாஸ் ஹிட் திரைப்படம் லக்கி பாஸ்கர். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது.
இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் தமிழ் & மலையாள மொழியில் உருவான திரைப்படம் சோலோ. இத்திரைப்படம் தமிழ் திரையுலகில் துல்கரின் ரசிகர்களை அதிகரித்த ஒரு திரைப்படம் ஆகும்!
Thanks For Reading!








English (US) ·