ARTICLE AD BOX

சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
குரூப் ‘பி’ போட்டிகள் திண்டுக்கலில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்பந்து சங்கம் தலைவர் சண்முகம், திண்டுக்கல் மாவட்ட பயிற்சி கலெக்டர் சி.வினோதினி பார்த்திபன், பார்வதி குழுமத்தின் என்.தர், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.ரமேஷ் படேல், மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

6 months ago
7







English (US) ·