மாரீசன் படத்தைப் பார்த்த கமல்.. முதலில் கொடுத்த விமர்சனம்

5 months ago 6
ARTICLE AD BOX

Kamal : வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பில் உருவாகும் இருக்கும் மாரீசன் படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த சூழலை சினிமா விமர்சகர்களுக்கு பிரீமியர் ஷோ போடப்பட்டது. அதற்கான விமர்சனத்தையும் அவர்கள் கொடுத்திருந்தனர்.

அதேபோல் கமலும் மாரீசன் படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவு போட்டிருக்கிறார். ஏற்கனவே பகத் பாசில் கமலுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இதில் பகத் பாசிலின் அமர் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் வடிவேலுவுடன் இணைந்து கமல் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். மாரீசன் படத்தை பார்த்த கமல், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு படமாகவும், சிந்தனை தூண்டும் கருத்துக்களை கொண்டிருக்கிறது.

மாரீசன் படத்திற்கு கமல் கொடுத்த விமர்சனம்

kamalkamal

இந்தப் படத்தில் ஆச்சரியப்படுத்தும் தருணங்களும் இடம்பெற்றிருக்கிறது. மாரீசன் படம் தன்னை சிரிக்க வைத்தது, சிந்திக்க வைத்தது மற்றும் வியக்க வைத்தது என்று கமல் தனது பாணியில் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். இதனால் படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

அதாவது மாமன்னன் படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு இருவரும் எதிரெதிர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் மாரீசன் படத்தை பொறுத்தவரையில் இருவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். திருடனாக இருக்கும் பகத் பாசில் ஒரு பைக்கை களவு செய்துவிட்டு சொல்கிறார்.

அந்த சமயத்தில் வடிவேலு ஏடிஎம் பின் நம்பரை மறந்து விட்டு பணத்தை எடுக்க முடியாமல் இருக்கிறார். அப்போது பைக்கில் வடிவேலுவுக்கு பகத் பாஸில் லிப்ட் கொடுக்க அவரது பணத்தை எப்படியாவது திருட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். கடைசியில் பகத் பாசிலுக்கு மன மாற்றம் ஏற்பட்டதா என்பதுதான் மாரீசன் படத்தின் கதை.

Read Entire Article