‘மாரீசன்’ விமர்சனம்: ஃபஹத் - வடிவேலுவின் ‘சீரியஸ் த்ரில்லர்’ அனுபவம் எப்படி? 

5 months ago 6
ARTICLE AD BOX

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் வடிவேலு - ஃபஹத் ஃபாசில் கூட்டணி. ட்ரெய்லர் பரவலாக கவனம் ஈர்த்திருந்தாலும் இப்படத்துக்கு எந்த வகையிலும் விளம்பரமே செய்யப்படாதது ஆச்சர்யத்தை தந்தது. அந்த அளவுக்கு பலருக்கும் தெரியாமல் ‘சைலன்ட்’ ஆக வெளியான ’மாரீசன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்துவிட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிறார் தயாளன் (ஃபஹத் ஃபாசில்). வெளியில் வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் தனது திருட்டு வேலைகளை தொடங்கி விடுகிறார். குளித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் செல்போன், தியேட்டரில் சாவியோடு நிற்கும் பைக் என திருடிக் கொண்டு செல்லும் வழியில் ஒரு வீட்டைப் பார்த்துவிட்டு அதற்குள் திருட நுழைகிறார். அந்த வீட்டில் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருக்கும் வேலாயுதம் பிள்ளையை (வடிவேலுவை) சந்திக்கிறார் தயா.

Read Entire Article