ARTICLE AD BOX
Ravi Mohan : ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் ரவி மோகன் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்த சூழலில் ரவி மோகன் தன்னை பிரிவதற்கு காரணம் கெனிஷா தான் என்று ஆர்த்தி கூறியிருந்தார். அதற்கு முன்னதாகவே ரவி மோகன் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் ஜோடியாக கெனிஷா உடன் வந்திருந்தார்.
அதுவும் புதுமாப்பிள்ளை கணக்காக வேட்டி சட்டையில் வந்த அதிர்ச்சியை கொடுத்திருந்தார். மேலும் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் ஒருவருக்கொருவர் குறை கூறி அறிக்கை விட்டு வந்தனர். ஆனால் நீதிமன்றத்தில் இதுபோன்ற அறிக்கைகள் சமூக வலைத்தளத்தில் வெளியிடக்கூடாது என்று கூறிவிட்டனர்.
ரவி மோகனுடன் கெனிஷா இருக்கும் புகைப்படம்
ravi-mohan-kenishaஅதன்பிறகு தாங்கள் போட்ட பதிவுகளையும் நீக்கிவிட்டனர். இப்போது ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள குன்றக்குடி சண்முகநாதப் பெருமாள் கோயிலுக்கு இருவரும் வந்திருக்கின்றனர்.
அப்போது இருவருக்கும் மாலை அணிவிக்கப்பட்டு இருக்கிறது. குருக்கள் பக்கத்தில் இருவரும் இருக்கும் புகைப்படம் தான் இப்பொழுது வெளியாகி இருக்கிறது. ரவி மோகனுக்கு தற்போது வரை சட்டப்படி இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை.
இப்படி இருக்கும் சூழலில் ஜெனிஷா உடன் எங்க போனாலும் செல்வது எந்த வகையில் நியாயம் என பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியானவுடன் ஆர்த்திக்கு ஆதரவாக தான் பலர் பேசி வருகின்றனர்.

6 months ago
8





English (US) ·