ARTICLE AD BOX

ராஜேஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கவுள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சமீபத்திய படங்கள் எதுவுமே பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். தனது அடுத்த படத்தின் கதையை முடிவு செய்துவிட்டார். இதனல் கேட்ட ஜீவா, அதில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
ராஜேஷ் இயக்குநராக அறிமுகமான முதல் படமான ‘சிவா மனசுல சக்தி’யின் நாயகன் ஜீவா தான். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ண முடிவு செய்திருக்கிறது. விரைவில் இக்கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்படத்தினை மதியழகன் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்.

4 months ago
6





English (US) ·