மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி20

5 months ago 6
ARTICLE AD BOX

மும்பை: சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடரை மீண்​டும் நடத்த சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) முடிவு செய்​துள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. 2009-ம் ஆண்டு தொடங்​கப்பட்ட சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடர் 2014-ம் ஆண்டு வரை நடை​பெற்​றது.

கிரிக்​கெட் ரசிகர்​களின் போதிய ஆதர​வின்​மை, ஸ்பான்​சர்​ஷிப் ஆகிய பிரச்​சினை​கள் காரண​மாக 2015-ம் ஆண்டு இந்த தொடரை நிறுத்​து​வ​தாக ஐசிசி அறி​வித்​தது. இந்​நிலை​யில் சாம்​பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்​டும் நடத்த ஐசிசி அனு​மதி அளித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அடுத்த ஆண்டு செப்​டம்​பரில் இத்​தொடர் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக​வும் ஐசிசி வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. உலகம் முழு​வதும் நடை​பெறும் டி20 லீக் தொடர்​களில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி​கள் இந்த தொடரில் பங்​கேற்க உள்​ளன. கடைசி​யாக நடை​பெற்ற சாம்​பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிஎஸ்கே அணி பட்​டம் வென்​றிருந்​தது.

Read Entire Article