ARTICLE AD BOX

மீரட்: ஒருபுறம் ஏஐ தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி என்று வளர்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்க மறுபுறம் மிகக் கொடூரமான குற்றங்கள் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான நடுங்கவைக்கும் குற்றம் ஒன்று உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் நடந்துள்ளது. அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட தங்களின் மகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர் நீதிக் குரல் எழுப்பியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
‘மருமகனுக்கு நீதி..’ மீரட் நகரைச் சேர்ந்த பிரமோத் - கவிதா தம்பதியின் மகள் முஸ்கான் ரஸ்தோகி. இவர் அதே நகரைச் சேர்ந்த சவுரவ் சுக்லாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், முஸ்கானுக்கு ஷாஹில் சுக்லா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து சவுரவை கொலை செய்துள்ளனர். இந்தக் கொலை அம்பலமான நிலையில் தங்களின் மகள் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர் என்றும் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெற்றோர் மருமகனுக்காக நீதி கோரியுள்ளனர்.

9 months ago
9







English (US) ·