ARTICLE AD BOX

என்ன சார் பண்றது... முன்ன போனா முட்டுது பின்ன போனா ஒதைக்கிதுன்ற கதையா போச்சுது எங்க பொழப்பு” என்று புலம்பித் தவிக்கிறார்கள் விருத்தாச்சலம் அருகிலுள்ள கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேஷன் போலீஸார்!
திருவிளையாடல் தருமி கணக்காய் இவர்களை இப்படி புலம்பவிட்டவர் கஞ்சா அடிக்ட் ஐயப்பன். விருத்தாசலம் அருகே சி.கீனனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். சிறுமியை திருமணம் முடித்த குற்றத்துக்காக போக்சோ வழக்கில் உள்ளே போய்விட்டு ஜாமீனில் வெளியில் வந்த இவரை கஞ்சாவுக்கு அடிமை என்கிறது போலீஸ். இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி தன்னிலை மறந்த நிலையில் மூதாட்டி ஒருவரை தாக்கி இருக்கிறார் ஐயப்பன். இதையடுத்து அவரை சுற்றி வளைத்து ‘கவனித்த’ பொதுமக்கள், கையோடு கொண்டு போய் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

8 months ago
8







English (US) ·