மும்மடங்கு சந்தோஷத்தை கொடுத்த மகன்.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஸ்பெஷல் ஃபோட்டோ

6 months ago 8
ARTICLE AD BOX

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக மதராஸி, பராசக்தி ஆகிய படங்கள் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது. இதில் பராசக்தி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அதன் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருக்கிறார். அதற்காக தோற்றத்தை கூட அவர் மாற்றி இருக்கிறார். இந்த சூழலில் தற்போது அவர் ஸ்பெஷல் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் கூட அவர் குடும்பத்திற்கு என நேரம் ஒதுக்க தவறுவது கிடையாது. மனைவியுடன் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதும் உண்டு.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஸ்பெஷல் ஃபோட்டோ

சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண இவர்கள் வந்திருந்தனர். அப்போது அஜித் குடும்பமும் வந்திருந்தது. இந்த போட்டோக்கள் வைரலானது.

தற்போது சிவகார்த்திகேயன் தன் மூன்றாவது மகனின் கியூட் போட்டோவை வெளியிட்டுள்ளார். எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ட்வீட் போட்டுள்ளார்.

அதேபோல் சிவகார்த்திகேயன் ஆர்த்தி இருவரும் மூன்றாவது குழந்தையை அணைத்தபடி இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது. இந்த கடைக்குட்டி ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article