ARTICLE AD BOX

தமிழில், திருப்பாச்சி, சச்சின், மன்மதன் அன்பு, சிங்கம், வீரம் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத் , தெலுங்கிலும் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கிறார். அவர் இசை அமைப்பில் தொடர்ந்து வெளியான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’, நாக சைதன்யாவின் ‘தண்டேல்’, தனுஷின் ‘குபேரா’ ஆகிய படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளன. ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் அவர்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒரு திரைப்படத்துக்கு கதைக்கு ஏற்றபடி வெவ்வேறு பாடல்கள் இடம்பெறும். அதற்கேற்றபடி இசை அமைத்து வருகிறேன். இருந்தாலும் மெலடி-க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். பின்னணி இசையிலும் அதிக கவனம் செலுத்துகிறேன்” என்றார்.

6 months ago
7





English (US) ·