ARTICLE AD BOX

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கவில்லை.
மேலும் டாஸின்போது இரு அணிகளின் கேப்டன்களுமே தங்களின் விளையாடும் லெவன் பட்டியலை பரஸ்பரம் பகிரும் நிலையில், அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவும், சல்மான் அலி ஆகா இருவருமே மேட்ச் ரெஃப்ரீயான ஆண்டி பைகிராஃப்டிடமே பட்டியலை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து, ஆட்டத்தின் முடிவிலும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை.

3 months ago
5







English (US) ·