மேற்கு ஆசிய சூப்பர் லீக்குக்கு தமிழக கூடைப்பந்து அணி தகுதி

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: தெற்காசிய கூடைப்பந்து சங்கம சாா்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. தமிழகம், பூடான், இலங்கை, நேபாளம், மாலத்தீவு ஆகிய 5 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றன.

இதில் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 106-49 என்ற புள்ளிக் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. பரிசளிப்பு விழாவில் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அா்ஜுனா, சபா செயலாளர் சந்தர் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சபா சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் வரும் மே 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ள மேற்கு ஆசிய சூப்பர் லீக்கில் விளையாடுவதற்கு தமிழக அணி தகுதி பெற்றுள்ளது.

Read Entire Article