ARTICLE AD BOX

பார்படோஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பார்படோஸில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸின்போது ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்திய ஜெய்டன் சீல்ஸ், கம்மின்ஸை நோக்கி ஆடுகளத்திலிருந்து கிளம்பு என்ற ரீதியில் சைகை காண்பித்தார். இதுதொடர்பாக போட்டி நடுவரிடம் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐசிசி நடத்தை விதிமுறையின்படி ஜெய்டன் சீல்ஸுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 months ago
7







English (US) ·