ARTICLE AD BOX

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலூர் அருகிலுள்ள பொட்டப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார்(21) என்பவர், தும்பைப்பட்டியைச் சேர்ந்த ராகவி(24) என்பவரைக் காதலித்தார். ராகவிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்து விட்டார்.
இந்நிலையில், இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. சித்தி வீட்டில் தன்னை கொடுமைப்படுத்துவதாக ராகவி செல்போன் மூலம் சதீஷ்குமாருக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலூர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலையத்தில் இரு வீட்டாரிடமும் ஆகஸ்ட் 16-ம் தேதி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, பெற்றோருடன் செல்ல ராகவி மறுத்து, சதீஷ்குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டார்.

4 months ago
6







English (US) ·