‘ரங்கூன்’ நாயகிக்கு கல்லீரல் அழற்சி: மருத்துவமனையில் அனுமதி

6 months ago 7
ARTICLE AD BOX

ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘ரங்கூன்’ படத்தில் நாயகியாக நடித்தவர், இந்தி நடிகை சனா மக்புல். தொடர்ந்து ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஏராளமான சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள இவர், தற்போது கல்லீரலில் ஏற்பட்டுள்ள நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “நான் சில காலமாக கல்லீரல் அழற்சி நோயுடன் வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் நிலைமை மோசமடைந்து விட்டது. இப்போது எனக்கு கல்லீரல் இறுக்கம் (சிரோசிஸ்) இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நானும் மருத்துவரும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்ப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எனது நோய் எதிர்ப்பு சிகிச்சையும் தொடங்கிவிட்டது.

Read Entire Article