ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் சுமார் இருநூறு படங்களுக்குத் திரைக்கதை, நாற்பது படங்களுக்குக் கதை எழுதிய கலைஞானம், 18 படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். சாண்டோ சின்னப்பா தேவரின் நிறுவனத்துக்குத் தொடர்ச்சியாக எழுதி வந்த அவரிடம், படம் தயாரிக்கச் சொன்னார், தேவர். தான் ஃபைனான்ஸ் செய்வதாகவும் சொன்னார்.
இதையடுத்து தயாரிப்பில் இறங்கிய கலைஞானம், அதற்காக ‘விஸ்வரூபம்’ என்ற கதையை எழுதினார். அண்ணன் - தங்கை பாசத்தை வைத்து எழுதிய கதை இது. சிறு வயதில் விபத்து ஒன்றில் பிரிந்து விடுகிறார்கள் அண்ணனும், தங்கையும். அண்ணன் தங்கையைத் தேடி அலைகிறான். ஒரு பணக்காரரின் மனைவி அண்ணனை வளர்க்கிறார். அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறான்.

6 months ago
7





English (US) ·