ARTICLE AD BOX
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாப்பாத்திரம் வைத்தே படையப்பா கதையை ரஜினி உருவாகினார். கதையை கே.எஸ் ரவிகுமாரிடம் சொல்லி திரைக்கதை எழுத சொல்லியுள்ளார்
நீலாம்பரியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க வைக்க ரஜினிக்கு ஆசையாம். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு விருப்பம் இல்லாததால் ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்துள்ளனர்
க்ளைமாக்ஸில் நீலாம்பரி மன்னிப்பு கேட்பது போல் காட்சி எழுதப்பட்டுள்ளது. ஆனால், நீலாம்பரி கெத்தாக இருக்க வேண்டுமென ரஜினி தற்போதைய க்ளைமாக்ஸ் சொல்லியுள்ளார்
படையப்பா ஒளிப்பரப்பு உரிமத்தை ஓடிடி தளங்களுக்கு விற்பனை செய்ய ரஜினி விரும்பவில்லை. பெரிய திரையில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கவே விரும்பியுள்ளார்.
படத்தில் நீலாம்பரி பயன்படுத்தும் Toyota Sera கார், உண்மையில் இயக்குனர் ரவிக்குமாரின் கார் ஆகும். அச்சமயத்தில் இறக்கை வைச்ச காராக வைரலானது
படத்தின் உண்மையான நீளம் 4 மணி நேரம் ஆகும். 2 இடைவெளி விட்டு படத்தை வெளியிட ரஜினி திட்டமிட்டுள்ளார். ஆனால், கமல் நல்லா இருக்காது என சொல்ல படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது
மின்சாரா கண்ணா பாடலை ஹிரஹரன், ஸ்ரீனிவாஸ் ஆகிய இருவரும் பாடியுள்ளனர். ஆனால், ரஜினிக்கும், ரவிகுமாருக்கு ஸ்ரீனிவாஸ் குரல் பிடித்ததால் அதை தேர்வு செய்தனர்
உலகம் முழுவதும் திரையிடப்பட்ட முதல் தமிழ் படமாக படையப்பா திகழ்கிறது. அச்சமயத்தில் 40 கோடி வசூலை குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. படத்தின் பட்ஜெட் 5 கோடி ஆகும்
Thanks For Reading!








English (US) ·