ARTICLE AD BOX

ராசிபுரம்: ராசிபுரம் அரசுப் பள்ளி கழிப்பறையில் மாணவர் உயிரிழந்து கிடந்தார். இதனிடையே, மாணவரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் பெயின்டர் பிரகாஷ். இவரது மகன் கவின்ராஜ் (14). இவர் ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் புதன்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்ற கவின்ராஜ் அங்கு மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். தகவல் அறிந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் கவின்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

10 months ago
8







English (US) ·