ராஜேஷ்: "தேடல் உள்ள கலைஞர்... பெரும் வருத்தம்" - கமல்ஹாசன் இரங்கல்!

7 months ago 7
ARTICLE AD BOX

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ராஜேஷ் இன்று (மே 29) தன்னுடைய 75வது வயதில் மரணமடைந்துள்ளார்.

150 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் தடம் பதித்திருக்கிறார். சினிமா கடந்து ஆன்மிகத்திலும் ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் சிறந்த பேச்சாளராகவும் அறியப்படுகிறார்.

rajesh

1974-ம் ஆண்டு கே. பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 'கன்னி பருவத்திலே', 'அச்சமில்லை அச்சமில்லை' ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ராஜேஷின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மூத்த நடிகர் கமல்ஹாசன், "தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ்.

தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என சமூக வலைதளங்களில் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என்…

— Kamal Haasan (@ikamalhaasan) May 29, 2025
Kamal Haasan: "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது..!" - கன்னட மொழி விவகாரத்தில் கமல் விளக்கம்!
Read Entire Article