ராஜ் ஐயப்பா ஜோடியாகிறார் ஷ்ரிதா ராவ்

3 months ago 5
ARTICLE AD BOX

அஜித்தின் ‘வலிமை’, ‘தருணம்’, ‘100’, ‘ரன் பேபி ரன்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், ராஜ் ஐயப்பா. இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ராஜன் ரவி இயக்குகிறார். இதை மிஸ்டர் பிக்சர்ஸ் ஸ்டூடியோ ஆர்.ஜெயலட்சுமி மற்றும் கன்டாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ஸ்ரீநாத், சவுந்தர்யா சரவணன், சிபி ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிரண் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, பாலா சுப்பிரமணியன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மதியழகன் கலந்து கொண்டார். படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Source : www.hindutamil.in

Read Entire Article