ARTICLE AD BOX

வாலாஜா சுங்கச்சாவடி அருகே காணாமல் போன பொறியாளர் மயங்கிய நிலையில் ஓடையில் சுமார் 36 மணி நேரத்துக்கு பிறகு நேற்று உயிருடன் மீட்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (44). இவர், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை நரசிம்மன் மேற்பார்வை செய்து வருகிறார். இந்நிலையில், நரசிம்மன் கடந்த 22ம் தேதி வாலாஜா சுங்கச்சாவடி அருகே சாலை அமைக்கும் பணிகளை மேற்பார்வையிட வந்தார். அன்றைய தினம் மாலை முதல் அவர் காணவில்லை. அவரது கைபேசி எண்ணுக்கு அழைத்து போது, அணைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

7 months ago
8







English (US) ·