ARTICLE AD BOX

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தவர் சேட் அயூப்கான் (56). மாரியூரைச் சேர்ந்த இவர் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலக உதவி எண்ணிற்கு பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதன்படி நேற்று குழந்தை நல அலுவலர்கள், வட்டாரக் கல்வி அதிகாரி பள்ளிக்குச் சென்று, மாணவிகள், பெற்றோரிடம் விசாரணை செய்தனர்.

10 months ago
9







English (US) ·