ARTICLE AD BOX

சேலம்: ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னங்களைப் போலியாக பயன்படுத்தியும், வங்கி அதிகாரிகள் போல் நாடகமாடியும் இரிடியம், காப்பர் விற்பனையில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும் என ஏமாற்றியும் ரூ.45 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயார் செய்து பொதுமக்களிடம் பண மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாக ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் கென்னடி, சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் புகார் அளித்தார்.

7 months ago
8







English (US) ·