ரிஷப் பந்த் காயத்துடன் போராடி அரை சதம் விளாசல்: இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

5 months ago 6
ARTICLE AD BOX

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடிய ரிஷப் பந்த் அரை சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார்.

மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, கே.எல்.ராகுல் 46, சாய் சுதர்சன் 61, கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 19, ஷர்துல் தாக்குர் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Read Entire Article