ARTICLE AD BOX

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து, 2012-ம் ஆண்டு வெளியான படம், ‘தடையறத் தாக்க’. இதில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத்சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறிய இளைஞன், ஒரு உதவி செய்வதன் மூலம் ரவுடி கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அவர்களிடம் இருந்து தப்பித்தானா? என்பதுதான் இதன் கதை. வரவேற்பைப் பெற்ற இந்த த்ரில்லர் படம், இப்போது நவீன தொழில்நுட்பத்தில், டிஜிட்டல் பதிப்பாக ரீ ரிலீஸ் ஆகிறது. அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஜூன் 27-ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது.

6 months ago
7





English (US) ·