ARTICLE AD BOX

கடலூர்: சிதம்பரத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் என்ற திமிங்கலஎச்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் தச்சன்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்திசோதனையிட்டதில், 7 கிலோ 600கிராம் எடையுள்ள திமிங்கல எச்சம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

3 months ago
5







English (US) ·