“ரொம்ப கஷ்டமா இருக்கு...” - அடுத்தடுத்த போட்டி ‘ஷெட்யூல்’ மீது ரஷீத் கான், அசலங்கா ஆதங்கம்

3 months ago 5
ARTICLE AD BOX

ஆசியக் கோப்பை டி20 போட்டிகள் யு.ஏ.இ.-யில் தொடங்கியது. அடுத்தடுத்து போட்டிகளை வைத்துக் கொண்டேயிருந்தால் எப்படி ஆட முடியும். உடல் தகுதியைப் பரமாரிக்க வேண்டாமா என்று இலங்கை கேப்டன் அசலங்காவும், ஆப்கன் கேப்டன் ரஷீத் கானும் லேசாக விமர்சனம் செய்துள்ளனர்.

அசலங்கா ஜிம்பாப்வே தொடரை முடித்துக் கொண்டு நேராக இங்கு வந்துள்ளார். இதனையடுத்து ‘நான் தூங்கி வழிகிறேன், நாளை உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன்’ என்று செய்தியாளர்களிடம் சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளார். “அடுத்தடுத்து போட்டிகளில் ஆடுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதுவும் பயணம் கடினம். இரண்டு நாட்களாவது ஓய்வு வேண்டும். கோச் ஓய்வு கொடுப்பார் என்று நினைக்கிறோம்.

Read Entire Article