ARTICLE AD BOX

நடப்பு ஐபிஎல் சீசனின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இன்னிங்ஸை குயிண்டன் டி காக் - சுனில் நரேன் ஜோடி ஓபன் செய்தனர். 2 சிக்ஸர்களுடன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆகாஷ் தீப் பந்துவீச்சில் குயிண்டன் டி காக் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களத்துக்கு வந்தார் கொல்கத்தா கேப்டன் அஜிங்க்ய ரஹானே, சுனில் நரேன் உடன் பார்டனர்ஷிப் அமைத்து பொறுப்புடன் விளையாடினார். இந்த இணை 54 ரன்கள் சேர்த்தது.

8 months ago
8







English (US) ·