ARTICLE AD BOX

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் லீட்சில் தொடங்கும் ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் பொதுவாக வறண்டிருக்கும் என்றும் டாஸ் வென்றால் முதலில் பவுலிங் எடுத்து முதல் நாள் பவுலிங் சாதக நிலைமைகளை அணிகள் பயன்படுத்தும் என்று பிட்ச் பராமரிப்பாளர் ரிச்சர்ட் ராபின்சன் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்குப் பிட்சைப் பார்த்தால் புற மைதானத்தின் பச்சைப்புல்வெளி போல் வித்தியாசம் இல்லாமல் உள்ளது, ஆனால் மேட்சிற்கு முன்னால் புற்கள் 8மிமீ நீளம் வரை இருக்குமாறு வெட்டப்பட்டு விடும். பிட்ச் இப்போதைக்கு மூடிவைக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் லீட்ஸில் 22-23 டிகிரி செல்சியசில் தொடங்கி 30 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடிப்பதால் பிட்சைத் திறந்து வைத்தால் முதல் நாளே வறண்ட பிட்ச் ஆகிவிடும். ஆகவே மூடப்பட்டுள்ளது.

6 months ago
7







English (US) ·