வட மாநிலங்களில் 20 குழந்தைகள் உயிரிழப்பு: இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் சென்னையில் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: காஞ்​சிபுரம் மாவட்​டம், சுங்​கு​வார்​சத்​திரம் பகு​தி​யில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து உற்​பத்தி நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. இந்த நிறு​வனத்​தில் தயாரிக்​கப்​பட்ட ‘கோல்ட்​ரிப்’இரு​மல் மருந்தை உட்​கொண்ட மத்​தி​யப் பிரதேசம், ராஜஸ்​தான் மாநிலங்​களைச் சேர்ந்த பல குழந்​தைகளுக்கு அடுத்​தடுத்து உடல்​நலக் குறைவு ஏற்​பட்​டதோடு, 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்​தனர்.

குழந்​தைகளின் உயி​ரிழப்​புக்கு இந்த இரு​மல் மருந்​து​தான் காரணம் என்று ராஜஸ்​தான் மற்​றும் மத்​தி​யப் பிரதேச மாநிலங்​களில் புகார்​கள் எழுந்​தன. இதைத்​தொடர்ந்​து, தங்​கள் மாநிலங்​களில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்​கக் கோரி சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள், தமிழக அரசுக்குகடிதம் மூலம் வலி​யுறுத்​தின.குழந்​தைகள் உயி​ரிழப்பை அடுத்​து, தமிழக அரசு ‘கோல்ட்​ரிப்' மருந்தை தமிழகத்தில் விற்​பனை செய்யத் தடை விதித்​தது. இந்நிலை​யில் மத்​தி​யப் பிரதேச சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் மற்​றும் உயி​ரிழப்பு ஏற்​பட்டமாநிலங்​களின் மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் சுங்​கு​வார்​சத்​திரத்​தில் உள்ள ஸ்ரீசென் ஃபார்மா மருந்து உற்​பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு செய்து, மருந்து தயாரிப்​புக்​குப்பயன்​படுத்​தப்​பட்ட மூலப் பொருள்​கள், தயாரிக்​கப்​பட்ட மருந்​தின் மாதிரி​களை பறி​முதல் செய்தனர்.

Read Entire Article