வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை

1 month ago 3
ARTICLE AD BOX

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று (அக்.31) தீர்ப்பளித்தது.

மயிலாடுதுறை கொத்தத் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கண்ணன்(27). வன்னியர் சங்க நகர செயலாளராக இருந்து வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. இவருக்கும் மயிலாடுதுறை கலைஞர் காலனியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் உணவகம் ஒன்றில் சாப்பிடும்போது ஏற்பட்ட தகராறில், கதிரவனை கண்ணன் தாக்கினார். இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Read Entire Article