வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை: இந்தியா ‘ஏ’ அணிக்கு ஜிதேஷ் கேப்டனாக நியமனம்

1 month ago 3
ARTICLE AD BOX

புதுடெல்லி: கத்​தா​ரில் உள்ள தோகா நகரில் வரும் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வளர்ந்து வரும் வீரர்​களுக்​கான ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் நடை​பெறுகிறது. இதில் இந்​தியா ‘ஏ’ உள்​ளிட்ட 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 2 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் இந்​தியா ‘ஏ’, பாகிஸ்​தான் ‘ஏ’, ஐக்​கிய அரபு அமீரகம் ‘ஏ’, ஓமன் ‘ஏ’ ஆகிய அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.

இந்​தியா ‘ஏ’ அணி தனது முதல் ஆட்​டத்​தில் 14-ம் தேதி ஐக்​கிய அரபு அமீரக அணி​யுடன் மோதுகிறது. இந்​நிலை​யில் இந்​தத் தொடரில் பங்​கேற்​கும் இந்​தியா ‘ஏ’ அணியை தேர்​வுக்​குழு​வினர் அறி​வித்​துள்​ளனர். விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ஜிதேஷ் சர்மா கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தற்​போது அவர், ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான டி 20 தொடரில் இந்​திய அணி​யில் இடம்​பிடித்து விளை​யாடி வரு​கிறார். 32 வயதான ஜிதேஷ் சர்​மா, ஐபிஎல் தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்ற ஆர்​சிபி அணி​யிலும் முக்​கிய பங்​கு​வகித்​திருந்​தார்.

Read Entire Article