வாலிபாலில் டான் போஸ்கோ சாம்பியன்

4 months ago 6
ARTICLE AD BOX

சென்னை: ​சான் அகாட​மி​யின் 7-வது சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான வாலி​பால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. 3 நாட்​கள் நடை​பெற்ற இந்​த தொடரில் சிறு​வர் பிரி​வில் 27 அணி​களும், சிறுமியர் பிரி​வில் 16 அணி​களும் கலந்து கொண்டு விளை​யாடின.

இதில் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் பெரம்​பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்​கில் முகப்​பேர் வேலம்​மாள் அணியை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றது. 3-வது இடத்தை மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்​கிலோ இந்​தி​யன் பள்​ளி​யும், 4-வது இடத்தை ராயபுரம் செயின்ட் பீட்​டர்ஸ் அணி​யும் பெற்​றன.

Read Entire Article