வால்பாறை 33-வது கொண்டை ஊசி வளைவில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: பலர் காயம்

7 months ago 8
ARTICLE AD BOX

வால்பாறை: திருப்பூரில் இருந்து கோவை வால்பாறையை நோக்கி 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்பாறைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து பயணித்தது. ஓட்டுநர் கணேசன் (49), நடத்துநர் சிவராஜ் ஆகியோர் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கவர்கல் பகுதியில் கார்ல் மார்க்ஸ் சிலையை தாண்டி சென்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த 33-வது கொண்டை ஊசிவளைவில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த மக்கள் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினர்.

Read Entire Article